கணவன் வேறொரு பெண் மீது அதீத ஆசைக் கொள்ள காரணம் – New Kamakathaikal

பொதுவாகவே திருமணத்திற்கு பிறகும் கூட ஆண்களுக்கு வேறு பெண்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும். ஆனால், அந்த ஈர்ப்பு வெறும் பார்வையுடன் நிறுத்திக் கொள்கின்றனரா? இல்லை, எல்லை தாண்டி சென்றுவிடுவார்களா? என்பது தான் பெரிய கேள்வி.
பெரும்பாலும் பார்வையுடன் நிறுத்திக் கொள்ளும் ஈர்ப்பாக தான் அமையும் எனிலும். தன் மனைவியை தாண்டி வேறு பெண் மீது ஒரு கணவன் அதிக ஈர்ப்பு கொல்வதற்கு சில காரணங்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்…காரணம் #1 மனைவியை எப்போதும் வேறு பெண்களுடன் ஒப்பிடும், கணவன்மார்கள், எளிதாக, வேறு பெண்கள் மீது அதீத ஈர்ப்பு கொண்டுவிடுகிறார்கள்.
காரணம் #2 மனைவிக்கு ஆடை உடுத்துவதில் நளினம் அல்லது ஆடை உடுத்தும் விதம் பிடிக்கவில்லை எனில், வேறு பெண்கள் மீது அல்லது நன்கு ஆடை உடுத்தும் பெண்கள் மீது ஆசை அதிகரித்துவிடுகிறது.
காரணம் #3 ஆபாசப் படங்கள் அதிகம் பார்க்கும் கணவன்மார்களுக்கு மற்ற பெண்கள் மீது அதிகம் ஆசை ஏற்படுகிறது என பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள தகவலாகும். இது பல வகையில் இல்லறத்தை சீர்குலைந்து போக செய்கிறது.
காரணம் #4 கடந்து செல்லும் பெண்களை பார்ப்பதில் தவறில்லை. ஆனால், கடந்து சென்ற பின்னும் உற்று நோக்கும் பழக்கம் உடைய கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதிக ஆசை கொள்கின்றனர்.
காரணம் #5 ஒவ்வொரு முறையும் வாக்குவாதம் ஏற்படும் போதும், நீ என்னை கட்டுப்படுத்த முடியாது, நீ யார் என்னை கட்டுப்படுத்த என கூறும் கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதீத ஆசை கொள்கின்றனர்.காரணம் #6 ஃபேஸ்புக்கில் பெண் முகவரிகள் அனைத்திற்கும் பிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் கொடுத்து, அதிக பெண் தோழிகள் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதிக ஆசை கொள்வார்கள்.
காரணம் #7 எதிர்பாலின நட்புகளுடன் மட்டும் அதிக நெருக்கத்துடன் பழகும் கணவன்மார்கள் மற்ற பெண்கள் மீது அதிக ஈர்ப்பும், அசையும் கொள்வார்கள்

Related